நாம் தமிழர் கட்சி – செய்யூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.பிரவீன்குமார் அவர்களின் தாயாரும், செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறை அன்புத்தங்கை சே.சுவாதிலஷ்மி அவர்களின் மாமியாருமான அம்மா இரா.சாவித்ரி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் இரா.பிரவீன்குமார், சே.சுவாதிலஷ்மி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா இரா.சாவித்ரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



