தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்! – சீமான் வேண்டுகோள்

234

தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய
இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்!

உலகமெங்கும் பரவி வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நமது இனத்தின் விடுதலை என்பது தமிழர் நிலத்தில் நாம் பெற இருக்கின்ற அரசியல் அதிகாரத்தை உள்ளடக்கியது என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் விடுதலை என்பது பெரும்பகுதி நாம் பெறவேண்டிய வரலாற்று விடுதலையில் இருக்கிறது. அண்மை காலங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டும், இருக்கின்ற அடையாளங்கள் கண்முன்னே சிதைக்கப்பட்டும் வருவதை நாம் அறிகிறோம். நாம் தெளிவுபெற வேண்டிய வரலாற்றுத் தரவுகள் பெரும்பாலும் ஆய்வுகளாகவும், மொழியின் தரவுகளை உள்ளடக்கிய இலக்கியச் சொற்களை கொண்டும் இன்றைய காலக்கட்டத்தில் நிருவப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழர் வரலாற்றில் மிக நெடிய ஆய்வுகளை நிகழ்த்தி கடந்த 50 ஆண்டுகளாக களப்பணியில் தொண்டாற்றி வரும் வரலாற்றுப் பேராய்வாளர், பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ம.சோ.விக்டர் அவர்கள். அவருடைய அயராத உழைப்பினால் தமிழர் வரலாறு, அரிய தரவுகளுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களாக வடிவம் கொண்டு இருக்கிறது. ஐயா ம.சோ.விக்டர் அவர்கள் ஏற்கனவே தன்னுடைய 34 நூல்களை சுருக்கமாக 25 தலைப்புகளில் முதல் தொகுப்பாக வெளியிட்டு இருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது 54 வரலாற்று ஆய்வு நூல்களை 30 பெரும் தலைப்புகளில் சுருக்கம் செய்து 30 நூல்களைக் கொண்ட இரண்டாம் தொகுப்பாக வெளியிட உள்ளார்.
இந்த வெளியீடானது ஏற்கனவே செய்தது போலவே முன்பதிவு வெளியீட்டின் அடிப்படையில் வெளியிடப்பட உள்ளது. வெளியிடப்பட இருக்கும் முப்பது புத்தகங்களும் மொத்தம் 12800 பக்கங்களை உடையது என்பதும், ஒவ்வொரு புத்தகமும் வலிமையான அட்டையின் கீழ் வர உள்ளது என்பதும் கூடுதல் தகவல். முப்பது புத்தகங்களும் ஒரே நேரத்தில் வெளியிடுவது என்பது மிகப்பெரிய பொருளாதாரச் செலவினை எதிர்நோக்கி இருக்கும் வேலை. இந்த முன் வெளியீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் 30 புத்தகங்களின் முழுமையான விலையான 14500 ரூபாயினை முன்வெளியீட்டு சலுகையாக 10000 ரூபாய்க்கு வழங்க உள்ளனர்.
இந்த நூல்கள் அனைத்தும் யாத்திசை மற்றும் தமிழம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட இருக்கின்றது. ஏற்கனவே பின்பற்றிய முறைகளைப் போன்று, இந்த முறையும் முன்னதாக பணம் செலுத்திய நபர்களுக்கு புத்தக வெளியீடு முடிந்த பிறகு உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில், தமிழர் வரலாற்றுப் பதிவுகளை உரிய தரவுகளுடன் மீட்டு, பதிவு செய்ய நிறைய ஆய்வாளர்கள் இல்லை. இந்நிலையில், அந்த இடத்தில் நின்று வரலாற்றுப் பேராய்வாளர் ஐயா ம.சோ.விக்டர் அவர்கள் தமிழர் வரலாற்றுக்குப் செய்கின்ற இப்பெரும்பணிக்கு உடன் நிற்பது தமிழ்ப்பேரினத்தில் பிறந்த நமது ஒவ்வொருவரின் கடமை.
எனவே, தக்கார் ம.சோ.விக்டர் அவர்கள் முன்னெடுத்துள்ள தமது 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்தில், நாம் அனைவரும் நம்மை இணைத்துக்கொண்டு பயன்பெறுவதோடு, தமிழர் வரலாற்று ஆய்வு நூல்கள் தொடர்ச்சியாக வெளிவர துணை நிற்கவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
புரட்சி வாழ்த்துகளுடன்,

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


நூல் தொகுப்பைப் பெற விரும்புகிறவர்கள், யாத்திசை பதிப்பகத்தின் பின்வரும் வங்கி கணக்கிற்கு தங்களது முன்வெளியீட்டு தொகையினைச் செலுத்தி, அதற்கு கீழ் உள்ள தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு, புத்தகங்களின் விபரம் மற்றும் அஞ்சல் தொகையின் விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

வங்கி கணக்கு விபரம்:
வங்கி கணக்கின் பெயர் : யாத்திசை பதிப்பகம் Yaathisai Pathippaham
வங்கி கணக்கு எண் : 807620110000137
வங்கி பெயர் : பாங்க் ஆப் இந்தியா (Bank of India)
கிளை : அரியலூர் கிளை, தமிழ்நாடு, இந்தியா (Ariyalur Branch, Tamilnadu, India)
IFSC Code : BKID0008076
SWIFT Code : BKIDINBBMOS
MICR Code : 621013002

வெளிநாடுகளில் வசிக்கின்ற உறவுகளும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். புத்தகங்கள் வெளியான பிறகு அதற்கான அஞ்சல் தொகையைப் (வெளிநாடுகளில் பெற விரும்புகிறவர்கள்) பொறுத்து விலையானது முடிவுசெய்யப்படும்.

இந்த வெளியீடு குறித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு யாத்திசை மற்றும் தமிழம் பதிப்பகத்தினரின் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளவும். நன்றி!
9843273914 / 9486334424 / 9442248351

முந்தைய செய்திஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் தமிழ்நாடு அளவில் 3 ஆம் இடம் பிடித்துள்ள அன்புமகன் ச.சுபாஷ் கார்த்திக் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்! – சீமான்
அடுத்த செய்திஅறிவிப்பு: சூன் 14 முதல் கன்னியாகுமரியில் இருந்து செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்