நாம் தமிழர் கட்சி – இராதாகிருட்டிணன் நகர் தொகுதியின் முன்னாள் தலைவரும், ஆகச்சிறந்த களப்போராளியுமான ஐயா சிதம்பரம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சிதம்பரம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



