கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு

32
கும்மிடிப்பூண்டி தொகுதி திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் தொகுதி பொறுப்பாளர் த.கணேசு மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் தொகுதியை சார்ந்த பொறுப்பாளர் சதீஷ் மற்றும் ஜெயின்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்..