துருக்கி மற்றும் சிரியா நாடுகளில்நிலநடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பு! பெருந்துயரத்திலிருந்து மீண்டுவர துணை நிற்போம்! – சீமான் ஆறுதல்

155

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் எனும் செய்திகள் அச்சத்தைத் தருகிறது. பல்லாயிரம் மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்து வருவது கவலையும், சொல்லொணா துயரத்தையும் அளிக்கிறது. துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இயற்கை சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்கள் இப்பெருந்துயர்களிலிருந்து விரைந்து மீண்டு வரவும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் துணைநிற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி – பொங்கல் விழா