ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் இரா.குமார் மீது கொலைவெறித் தாக்குதல்! – சீமான் கண்டனம்

769

தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புத்தம்பி இரா.குமார் அவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்த காரணத்தினாலேயே தம்பி குமார் மீது இத்தகைய கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்தினை கருத்தாக எதிர்கொள்ள திராணியற்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற தாக்குதல் தொடுப்பது கோழைத்தனமாகும். இத்தகைய சமூகவிரோதிகளுக்கு ஆளும் ஆட்சியாளர்கள் துணைநிற்பது வெட்கேடானதாகும். தம்பி குமார் மீது தாக்குதல் தொடுத்தவர்களை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து சிறையிலடைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தம்பி இரா.குமார் விரைந்து நலம்பெற்று திரும்ப விழைகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈழத்தாயக விடுதலைப் போராட்ட வரலாற்றில் அருட்தந்தை ஐயா அன்ரன் சின்னராசா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திநமக்கு வாக்களித்த ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் காப்பாற்ற, ஒன்றுக்கு ஆயிரம் மடங்காக இன்னும் வீரியமாக களத்தினில் உழைப்பினைச் செலுத்த அணியமாவோம்!