அறிவிப்பு: டிச.26 புதுச்சேரியில் விருட்சம் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா

136

க.எண்: 2022120593
நாள்: 24.12.2022

அறிவிப்பு:

வருகின்ற 26-12-2022 திங்கள்கிழமையன்று காலை 10 மணியளவில், புதுச்சேரி மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள விருட்சம் மருத்துவமனை திறப்பு விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார். அந்நிகழ்வைத் தொடர்ந்து, புதுச்சேரியைச் சேர்ந்த மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

விருட்சம் மருத்துவமனை திறப்பு விழா

மற்றும்

மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
26-12-2022 திங்கள்கிழமை, காலை 10 மணியளவில்

தலைமை:
செந்தமிழன் சீமான்
இடம்:
புதுச்சேரி
விருட்சம் மருத்துவமனை
மகாத்மா காந்தி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி சந்திப்பு

இந்நிகழ்வில் புதுச்சேரியைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி