நாம் தமிழர் கட்சியில் கடந்த 2011 ஆண்டு முதல் பயணித்து, பத்தாண்டிற்கும் மேலாக மண்ணிற்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் தீவிர களப்பணியாற்றி வந்த மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர், அன்புத்தம்பி சு.மாதவன் அவர்கள் கடந்த 26-09-2022 அன்று பணியிடத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தம்பி மாதவனின் எதிர்பாராத மறைவினால் குடும்பம் வறுமையுற்று வாழ்வதற்கே மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில், அவருடைய அன்பு மகள் அருளரசி அவர்களுக்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏறத்தாழ 6 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியினை அளித்து உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நிதியுதவி வழங்க வேண்டிய வங்கி கணக்கு விவரம் :-
இரா.ஏழுமலை (திருவள்ளூர் மண்டலச் செயலாளர்)
இரா. ஏழுமலை (ELUMALAI R)
SBI AC. No: 34529589774
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
மாதவரம் கிளை, சென்னை – 60
IFSC: SBIN0015491
Google pay number: 9282102289
தொடர்புக்கு: 9282102289
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி