அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – சேலம்

373

க.எண்: 2022110507
நாள்: 16.11.2022

அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் சேலம்

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற 27-11-2022 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 03 மணியளவில், சேலம், ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நடைபெறவிருக்கிறது.

நவம்பர் 27
மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்
27-11-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 03 மணியளவில்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
விஜய் சேசா மகால்,
பெரியார் பல்கலைக்கழகம் எதிரில், ஓமலூர் சுங்கச்சாவடி அருகில்
சேலம் மாவட்டம்

மாவீரர் நாள் மரபுபடி மிகச்சரியாக மாலை 6.10 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படும். எனவே உறவுகள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே நிகழ்விடத்திற்கு வர வேண்டுமாய் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி