சுற்றறிக்கை: ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பாக

779

க.எண்: 2022110506
நாள்: 17.11.2022

சுற்றறிக்கை: ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான
ஆண்டுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பாக

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் பட்டியல், கட்சி நிகழ்வுகள், மக்கள் நலப் பணிகள் குறித்தான செய்திகள், அரசியல் விழிப்புணர்வுக் கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்கள், பயனுள்ள நூல்கள் குறித்த அறிமுகம், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பொதுக்கூட்ட உரைகள் மற்றும் கேள்வி-பதில்களின் எழுத்தாக்கம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய ‘புதியதொரு தேசம் செய்வோம்’ மாத இதழ் கடும் நிதி நெருக்கடியிலும் தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 25-09-2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் தங்களை ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழுக்கான ஆண்டுக் கட்டணதாரர்களாக இணைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணமாக ரூ.350/- (அஞ்சல் செலவு உட்பட) மேலே குறிப்பிட்டுள்ள பொறுப்பாளர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. எனவே கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி அளவிலான கட்சி மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் வருகின்ற 30-11-2022 தேதிக்குள் ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்கூட்டியே ஆண்டுக்கட்டணம் செலுத்துபவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான 12 மாத இதழ்களோடு நடப்பு ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான இதழும் கூடுதலாக அனுப்பப்படும்.

’புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்தியப் பொறுப்பாளர்களின் இறுதிப் பட்டியல் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, டிசம்பர் 2022 இதழிலும் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

நவம்பர் 26, தலைவர் பிறந்தநாள் அன்று செஞ்சியில் நடைபெறும் தமிழர் எழுச்சி நாள் விழாவிலும், நவம்பர் 27 அன்று சேலத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்விலும் நேரடியாக ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக குடில்கள் அமைக்கப்படவிருக்கிறது, உறவுகள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பின்வரும் வங்கிக்கணக்கில் ரூ.350/- ஆண்டுக்கட்டணம் செலுத்திய பிறகு, கீழ் காணும் தலைமை அலுவலகத் தொடர்பு எண்ணிற்கு பகிரி வழியாக அஞ்சல் முகவரியையும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு விவரத்தினையும் அனுப்பி வைத்தால் ஆண்டுக்கட்டணம் உறுதிசெய்யப்பட்டு, மாதந்தோறும் தங்கள் முகவரிக்கு இதழ் அனுப்பி வைக்கப்படும்.

வங்கி கணக்கு விவரம்:

வங்கி கணக்கின் பெயர்: எங்கள் தேசம் ( Engal Thesam )
வங்கி பெயர்: இந்தியன் வங்கி ( Indian Bank )
வங்கி கணக்கு எண்: 6325605143
கிளை: மப்பேடு ( Mappedu )
IFSC Code: IDIB000M119
Gpay/PhonePe UPI: 9092529250

இதழ் குறித்த தொடர்புக்கு: 9500767589 / 9095859921 / 9600709263
மின்னஞ்சல்: puthiyathorthesam@gmail.com

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அன்புமகள் அருளரசியின் சிகிச்சைக்கு உதவுவோம்! – தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் சீமான் வேண்டுகோள்
அடுத்த செய்திஅரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்! – தமிழ்நாடு அரசிற்கு சீமான் வலியுறுத்தல்