அறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)

286

க.எண்: 2022120595

நாள்: 24.12.2022

அறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)

திருவையாறில், புறவழிச்சாலை அமைப்பதற்காக மண்ணைக் கொட்டி விளை நிலங்களை அழித்துவரும் திமுக அரசைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை, வருகின்ற 27-12-2022 செவ்வாய்க்கிழமையன்று காலை 09:30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திருப்பூந்துருத்தியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, கோரிக்கைகளைக் கேட்டறியவிருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து, ‘தக்கார்’ ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியுள்ள ‘எல்லீசு பெருமகனாரின் யாப்பிலக்கண விளக்கவுரை’ எனும் நூலின் வெளியீட்டு விழா, அரியலூர் புறவழிச் சாலையில் அமைந்துள்ள இரிதன்யா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் காலை 10:30 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று நூலினை வெளியிடவிருக்கிறார்.

இந்நிகழ்வுகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: டிச. 28, டாடா தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், மண்ணின் மைந்தர்களுக்கு 90% வேலைவாய்ப்பு உரிமைக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: டிச.27, சீமான் முன்னிலையில் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாசலம்