அறிவிப்பு: டிச.27, சீமான் முன்னிலையில் மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா – விருத்தாசலம்

394

க.எண்: 2022120594

நாள்: 24.12.2022

அறிவிப்பு:
மாற்று கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
(டிச.27, விருத்தாசலம்)

  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறவுகள் மாற்று கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்து கொள்ளும் விழா, வருகின்ற 27-12-2022 செவ்வாய்க்கிழமையன்று மாலை 03 மணியளவில், விருத்தாசலம் சண்முகம் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

மாற்று கட்சியினர்
நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
27-12-2022 செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணியளவில்

எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
விருத்தாசலம்
சண்முகம் மகாலட்சுமி திருமண மண்டபம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: திருவையாறு புறவழிச்சாலைச் சாலை திட்ட எதிர்ப்பு விவசாயிகளுடன் சந்திப்பு (திருப்பூந்துருத்தி) மற்றும் ‘தக்கார்’ ம.சோ.விக்டர் நூல் வெளியீட்டு விழா (அரியலூர்)
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் நினைவுநாள் மற்றும் கீழ்வெண்மணி ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு