மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி அக்காள் செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

35

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டம்
சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம் அருகே
14-வது வட்ட செயலாளர்
விஜயபாண்டி, பகுதிச் செயலாளர் மணிகண்டன், தொகுதி செயலாளர் சிவக்குமார்,
ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் ” செங்கொடி 11-ஆம் ஆண்டு நினைவேந்தல் ” நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்
பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் இணை செயலாளர்
பெ.மலைச்சாமி, மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் , மை சாராள் ,
பாண்டியம்மாள், அன்பரசி, ஷாகின் பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட செங்கொடி படத்திற்கு மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

செய்தி வெளியீடு – கனகராஜ் 8637420078
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்

 

முந்தைய செய்திரிசிவந்தியம் தொகுதி பண விதை சேகரிப்பு மழலையர் பாசறை
அடுத்த செய்திதென்காசி வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி ஆடித்திருவிழா