தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் கலந்தாய்வு

9

22/7/2022 அன்று தேன்கனிக்கோட்டை நகர தலைவர் ஆசிப் அலி அவர்களின் தலைமையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் அவசர கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடிந்தது. 27 அன்று நடக்கவிருக்கும் கொடியேற்று விழா எவ்வாறு சிறப்பாக நடத்தலாம் என்றும் அடுத்த கட்ட நிகழ்வாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்கலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் சார்பாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
முருகன் மற்றும் தொகுதி சார்பாக தளி தொகுதி தலைவர் நாகராஜ் கலந்து கொண்டனர்