சோளிங்கர் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு

54

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 04/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி அளவில் நம்முடைய புலிக்கொடி ஏற்றப்பட்டது.. பிறகு சரியாக 10 மணிக்கு அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி திட்டமிட உத்திரம்பட்டு கிராமத்தில் கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வு இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் தலைமையிலும் இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் பி. கோகுலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கா.மு. தௌபிக் பிக்ரத், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் அசேன் மற்றும் இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் ச.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தலைவர் பீட்டர் வெஸ்லி மற்றும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் க. ராஜ்குமார் மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சி உறவுகள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்

இவன்

க.ராஜ்குமார்
தொகுதி செயலாளர்
சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி
8940133491