அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்

158

க.எண்: 2022080356

நாள்: 18.08.2022

அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்

 நிகழ்வு 01 நாள்: 20-08-2022 சனிக்கிழமை மாலை 04 மணியளவில்
தேங்காப்பட்டணம் துறைமுகம் பார்வையிடல்

முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும் கோர அலைகளில் படகுகள் சிக்குண்டு விபத்துக்குள்ளாவதில் தொடர்ச்சியாக மீனவச் சொந்தங்கள் உயிர்பலியாகும் பகுதிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பார்வையிட்டு மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிகிறார்.

நிகழ்வு 02 நாள்: 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்

இடம்: திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில்,
குளச்சல் தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம்

கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து,
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி