அறிவிப்பு:
ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் நமது மூதாதை மாயோன் பெரும்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி
19-08-2022 வெள்ளிக்கிழமையன்று, காலை 10 மணியளவில்
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி