தவத்திரு. ஊரன் அடிகளார் ஆற்றிய சமயப்பணிகள் தமிழ்ப் பண்பாட்டு மீட்சித்தளத்தில் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்! – சீமான் புகழாரம்

147

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ இந்த நூற்றாண்டின் இணையற்ற உயிர்மநேயர், அருளாளர் வள்ளலாரின் வழிபற்றி, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே தம் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஐயா தவத்திரு. ஊரன் அடிகளார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த மனத்துயரமடைந்தேன்.

சமய துறவியாக மட்டுமின்றி, 22ற்கும் மேற்பட்ட சமய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுச் சிறந்த தமிழறிஞராக ஐயா அவர்கள் செய்த தமிழ்ப்பணிகள் மிகுந்த போற்றுதலுக்குரியது. வடலூர் சன்மார்க்க நிலைய அறங்காவலர், தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று அரை நூற்றாண்டு காலமாக அவர் ஆற்றிய சமயப்பணிகள் தமிழ்ப் பண்பாட்டு மீட்சித்தளத்தில் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்.

ஐயா தவத்திரு. ஊரன் அடிகளாருக்கு எனது கண்ணீர் வணக்கம் !

 

 

முந்தைய செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்