அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பி தேவன் படுகொலைக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் தேவநாதன் அவர்களின் தம்பி தேவன் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கீழ்கொடுங்கலூர் அருகாமையில் மர்மமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயருமடைந்தேன். தம்பியை இழந்து வாடும் தேவநாதன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
இப்படுகொலை வழக்கில் உரிய நீதிவிசாரணையை விரைவாக மேற்கொண்டு, படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, சட்டத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தரவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
திருவண்ணாமலை, அனக்காவூர் ஒன்றியம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் தேவநாதன் அவர்களின் தம்பி தேவன் அவர்கள் கீழ்கொடுங்கலூர் அருகாமையில் மர்மமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயருமடைந்தேன். pic.twitter.com/LaV7gVali7
— சீமான் (@SeemanOfficial) July 13, 2022
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி