எண்ணூர், வல்லூர் கிராமத்து மக்களுடன் நாம் தமிழர் கட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் கள ஆய்வு.
எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCO சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில்,
அங்குள்ள மீனவச் சொந்தங்களுடன் இணைந்து, தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் மாபெரும் கள ஆய்வு, ஜூலை 19, செவ்வாய்க்கிழமை அன்று நடக்கவிருக்கிறது.
தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான, தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் (TANTRANSCO), தற்போது எண்ணூரிலுள்ள முகத்துவாரத்தினை ஆக்கிரமித்துத் தொடரமைப்பு கோபுரங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, TANTRANSCO-ஆல் அமைக்கப்பட்ட கோபுரங்கள் மற்றும் சாலைகளால் நீர்நிலை மற்றும் கழிமுகப் பகுதிகள் இழக்கப்பட்டுள்ளன. TANTRANSCO கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறையின்படி பெற்ற அனுமதியினை முற்றிலும் மீறி, அனுமதியில் குறிப்பிடப்பட்ட நிலப்பகுதிகளைத் தாண்டியும் அதன் கோபுரங்களை அமைத்து வருகிறது. அதன் நீட்சியாகத் தற்போது கொற்றலை ஆற்றிலுள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதிக்குள் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இது போன்ற ஆக்கிரமிப்புகளால் இயற்கை அமைப்புகள் சீரழிவதோடு, மீன்பிடிப்புப் பகுதிகள் தாக்கத்திற்கு உள்ளாகி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அச்சொந்தங்கள் தொடர்ந்து போராடியும், வலியுறுத்தியும் தமிழக அரசின் சார்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் படாததால், TANTRANSCO-வின் செயல்பாடுகளைக் கண்டித்தும், கொற்றலை ஆறு ஆக்கிரமிக்கப்பு மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார சீரமைப்பினை வலியுறுத்தியும், செந்தமிழன் சீமான் அவர்களது தலைமையில் வல்லூர் கிராமச் சொந்தங்களுடன் இணைந்து, தமிழ்நாட்டு அரசின் கவனம் ஈர்க்கும் மாபெரும் கள ஆய்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் – எண்ணூர் கழிமுக மேம்பாலம், வல்லூர் கிராமம் (TANTRANSCO கட்டுமானப்பகுதி).
நாள் – ஜூலை 19, செவ்வாய்க்கிழமை.
நேரம் – காலை 10 am.
நிகழ்வு ஒருங்கிணைப்பு – நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை.
தொடர்புக்கு: 9884323380, 7401683331.