ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கபாடி போட்டி விருது வழங்கும் நிகழ்வு

37

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம்-செட்டியார்பட்டி பகுதியில் கடந்த 02/07/2022 மற்றும் 03/07/2022 தேதிகளில் கபாடி போட்டிகள் நடைபெற்றது. தொகுதி செயலாளர் திரு.அய்யனார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கபடி போட்டி நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.