மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – சுற்றுச் சூழல் பாசறை சார்பில் கருவாக்குறிச்சி காலனி அரசுப்பள்ளி வளாகத்தில் 50 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்விற்கு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தொகுதிச் செயலாளர் அ.ராஜேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தலைவர் ராம.அரவிந்தன் கலந்துகொண்டார். 50 தென்னைக் கன்றுகளை
தட்டன்கோவில் மூர்த்தி வழங்கினார். இந்நிகழ்வில் தொகுதி தலைவர் இராக.பாஸ்கர், தொகுதி துணை தலைவர் ப.பாலு , தொகுதி பொருளாளர் நா.கண்ணன் உள்பட 25 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தென்னை கன்றுகளை நட்டனர்.