திண்டுக்கல் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

124

திண்டுக்கல் தொகுதி 18-04-2022 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகில் சொத்து வரி உயர்வு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தமிழக காவலர்களை

தாக்கியதை கண்டித்தும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தக்கோரி ஆளும் அரசை கண்டித்து திண்டுக்கல் தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர் செயசுந்தர், செயலாளர் சின்ன மாயன், பொருளாளர் மரிய குணசேகரன் , மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர் மு.ப. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர். சிவசங்கரன் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற பொறுப்பாளர் முனைவர். சைமன் ஜஸ்டின் ஆகிய இருவரும் கண்டன உரையாற்றினர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமை தாங்கினார்.