தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

73
16.04.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டம் பொறுப்புக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை (B.com.,LLB) தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில பொருளாளர் ஐயா இராவணன்(MA.,BL- உயர்நீதிமன்ற வழக்கறிஞர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஐயா ஜெகதீசபாண்டியன் மற்றும் ஐயா இராசா அம்மையப்பன் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்ட தலைவர் பெ.ஆனந்தன் (ஊ.ம.உ), மேற்கு மாவட்ட செயலாளர் இரா.தமிழழகன் (மென்பொருள் பொறியாளர்), மேற்கு மாவட்ட பொருளாளர் அன்பழகன் (மாவு ஆலை தொழில்நுட்பம்) மற்றும் முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் நா.கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, வெள்ளிச்சந்தையில் இயங்கி வரும்  அட்சன் பால் நிறுவனத்திற்கெதிராக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண்பது, ஒகேனக்கலை நெகிழியில்லா சுற்றுழாத்தலமாக மாற்றுவது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும்  கலந்துக்கொண்டனர்.