கம்பம் தொகுதி கண்டன ஆர்பாட்டம் நடத்த விடாமல் கைது நிகழ்வு

21

கம்பம் தொகுதி சார்பில் ஏழு தமிழர்களையும் சிறையில் வாடும் இசுலாமிய தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 23.12.2021 மாலை நடத்த துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதில் மாநில பேச்சாளர் *அனீஸ் பாத்திமா* பேச திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை அதில் பேச கூடாது என கூறி தடுத்தனர். இந்நிலையில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த முற்பட்டதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் உறவுகளை கைது செய்து பேருந்தில் ஏற்றி சென்ற காவல்துறை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் விடுத்தது.

சனநாயக முறைப்படி நடக்க இருந்த ஆர்பாட்டத்தில் பேசவிடாமல் தடுத்த திமுக அரசின் காவல் துறையை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.

செய்தி வெளியீடு:

கோம்பை ப.கண்ணன்
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:9677608288, 9080913577.