மொரப்பூரில் திமுக குண்டர்களின் அட்டூழியத்தைக் கண்டித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழினிசாமிக்கு நன்றி தெரிவித்த சீமான்

117

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரிய ஆர்ப்பாட்டத்தில், அத்துமீறி நுழைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்திய திமுக குண்டர்கள் மீதும், வேடிக்கைப் பார்த்த காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிகாரத்திமிரில் சனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைத்து ஆணவத்தோடு செயல்படும் திமுகவினரின் அட்டூழியத்தைக் கண்டித்துமென அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றியும், வணக்கமும்!

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி