கொடைக்கானல் பள்ளி குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கொடுங்கோலர்களைக் கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

208

கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ்சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

குழந்தையைக் கொடூரமாகக் கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாகக் கண்டறிந்து கைதுசெய்து, கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இதுபோன்ற கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவிருதுநகர் தெற்கு மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதென்காசி தொகுதி குருதிக் கொடை முகாம்