அறிவிப்பு: டிச.12, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் பேரழைப்பு

598

க.எண்: 2021120290
நாள்: 03.12.2021

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
(டிசம்பர் 12 – சென்னை வள்ளுவர்கோட்டம்)
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய முடியாது என அரசாணை வெளியிட்டுள்ள திமுக அரசின் மதவாதப்போக்கைக் கண்டித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுத்திருக்கும் திமுக அரசின் வஞ்சகப் போக்கைக் கண்டித்தும், எதிர்வரும் 12.12.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை – வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி