ஆயிரம்விளக்கு தொகுதி தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல்

20

(02.12.2021) ஆயிரம் விளக்கு தொகுதி 109 வது வட்டத்தில் பஜனை கோயில் 4 வது தெருவில் தண்ணீர் தேங்கியிருந்ததை சரி செய்ய சொல்லி  மாநகராட்சி AE, SO ஆகியோரை சந்தித்து மனு கொடுத்ததிற்கு இணங்க வேலை நடைபெற்று கொண்டிருக்கும்போது சில பிரச்சனை காரணமாக வேலை நிறுத்தப்பட்டது. எவ்வளவு சொல்லியும் கேட்காததால் நம் கட்சி சார்பாக அனைத்து தொலைக்காட்சி நிருபர்களையும் வரவழைத்து பேட்டி கொடுத்த பின் மாநகராட்சியில் இருந்து அனைத்து பொறுப்பாளர்கள் நேரில் வந்து வேலை ஆரம்பமானது. எந்த கட்சியும் முன்னெடுக்க வில்லை. நாம் செயல்பட்டு சிறப்பாக வேலை நடைபெற்றதற்கு ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தார்கள். நம் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதில் தொகுதி செயலாளர் முகமது ஹாரூன், பகுதி செயலாளர் குமணன், தொகுதி செய்தி தொடர்பாளர் ரமேஷ் மற்றும் டேனியல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு 9840099115

 

முந்தைய செய்திதென்காசி தொகுதி தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி மழை நீர் தேங்கியதை சரி செய்ய வேண்டி மனு அளித்தல்