குளித்தலை சட்டமன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

65

தமிழினத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆவது அகவை தினத்தை முன்னிட்டு, அன்று (26-11-2021 வெள்ளிக்கிழமை), நாம் தமிழர் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் குளித்தலை மலையப்ப நகர் ரோசா மிஸ்டிகா குழந்தைகள் காப்பகம், வைகநல்லூர் அக்ரஹாரம் கேண்டில் டிரஸ்ட், தண்ணீர்பள்ளியில் உள்ள சாந்தி வனம் ஆதரவற்றோர் இல்லம், வலையப்பட்டியில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் ஆதரவு இல்லம் ஆகியவற்றில் வசிக்கும் ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் தாய் தமிழ் உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்.