கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

28

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் கண்டன உரை நிகழ்த்தினார், தென்காசி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பழ.கணேசன், அருண் சங்கர், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜாபர், வடகரை கிளை த.தொ.பா செயலாளர் அலி ,அச்சன்புதூர் கிளை த.தொ.பா செயலாளர் மைதீன், சுடலை, கடையநல்லூர் ஒன்றிய பொருளாளர் பால்துரை, வடகரை கிளை பொறுப்பாளர்கள் மற்றும் புளியரை காளையப்பன் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி.