அரியலூர் மாவட்டம் குருதிக்கொடை முகாம்

30

அரியலூர் மாவட்டம், 28/11/2021 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில்,
மாவட்ட தலைவர் திரு செ.சரவணன் மற்றும் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர். க.கரிகால்வளவன் இவர்களின் முன்னிலையிலும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
குருதிக்கொடை முகாமை அரியலூர் மருத்துவர் இளங்கோவன் (குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்) அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்வின்போது அரியலூர் தொகுதி செயலாளர் கி.குமார் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் மா.பிரபாகரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது குருதியினை வழங்கினர்.

செய்தி வெளியீடு,
வை. சிற்றரசு,
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
அரியலூர் தொகுதி,
6379501522