தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

12

1.பகுதி பொறுப்பிலிருந்து தொகுதி பொறுப்புக்கு வந்த உறவுகள் வகித்த பொறுப்பிடங்களில் ஏற்ப்பட்ட வெற்றிடங்களை ஏனைய பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொகுதி பொறுப்பாளர்களும் இணைந்து வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2.தொகுதி சார்ந்த செயல் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு மாதத்தின் முதல் நாட்களிலும், தொகுதியில் நடைபெற்ற நிகழ்வுகள், வரவு மற்றும் செலவு குறித்த கலந்தாய்வு மாதத்தின் இறுதி நாட்களிலும் கட்டாயம் நடத்த முடிவெடுக்கபட்டுள்ளது.

3.கட்சி அலுவலகத்தில் ஒப்பந்த புதுப்பித்தல் குறித்து அலுவலகத்தின் உரிமையாளர் இடத்தில் பொறுப்பாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது.மேலும்,
அவர் வருகின்ற மாதத்தில் இருந்து ரூ.1500 வாடகை கூட்டி தரும்படி நம்மிடம் கேட்டிருக்கிறார்.அதனை தொகுதி பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு செயல்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

4.பரப்புரை வாகனம் நிலுவையில் இருப்பதை சமநிலைப் படுத்தி
வருகின்ற நாட்களில் திரு.தண்டபாணி ஐயா அவர்களை அழைத்து பேசி பரப்புரை வாகனத்தை திரும்பப்பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

5.ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வருகின்ற மாதத்தில் இருந்து தொகுதியில் உள்ள அனைத்து பகுதி உறவுகளின் இல்லங்களுக்கும் புதியதோர் தேசம் மாத இதழை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

6.வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 123 வேட்பாளர்களை களம்காண வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

7.பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்படாத பகுதிகளான பீர்கங்கரணை, திருவஞ்சேரி, அகரம்தென் மற்றும் மதுரபாக்கம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்து கட்டமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

8.நாம் தமிழர் கட்சி தாம்பரம் சட்டமன்ற தொகுதி வங்கி கணக்கின் கணக்காளர்களை புதுப்பித்தல் குறித்து
விரைவான செயல்படுகளை முன்னெடுக்க
திட்டமிடப்பட்டுள்ளது.

9.ஏற்கனவே இருக்கும் பொருளாதார குழுவினை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.