(03-10-2021) காலை 9மணி அளவில் உடுமலை நகரம், தங்கம்மாள் ஓடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டத் தலைமையின் புதிய அலுவலகமான *நம்மாழ்வார் குடிலை* மாவட்ட செயலாளர் திரு. பாபு ராசேந்திர பிரசாத் அவர்கள் திறந்து வைக்க மகளிர் பாசறை பொறுப்பாளர்களான சீத்தாலட்சுமி மற்றும் ரீட்டா மேரி அவர்கள் தமிழ்த்தாயின் படத்திற்கு குத்து விளக்கு ஏற்றினர் அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் திரு. தேனரசு அவர்கள் தலைமை அலுவலகத்தில் புலிக்கொடி ஏற்றிவைத்தார் தொடர்ச்சியாக மழலையர் பாசறை பொறுப்பாளர் புகழினி அவர்கள் பாலச்சந்திரன் படிப்பகத்தை திறந்து வைத்தார். மேலும் கல்விதந்தை காமராசர், பெருந்தமிழர் மா.பொ. சிவஞானம், ஈழத்து இளவரசன் பாலச்சந்திரன் ஆகியோரின் நினைவேந்தல் மற்றும் புகழ்வணக்க நிகழ்வினை உடுமலை-மடத்துக்குளம் தொகுதித் தலைவர்கள்:- யோகேசு, ஈசுவரசாமி; தொகுதி செயலாளர்கள்:- செந்தில்ராவணன், அன்வர்தீன்; தொகுதி பொருளாளர்கள் :- ராசேசு, பாலமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் உடுமலை-மடத்துக்குளம் நகர, ஒன்றிய மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.