சேலம் தெற்கு தொகுதி அடிப்படை வசதிகள் சீர் செய்யக் கோரி மனு

5

(13-10-21) செவ்வாய்க்கிழமை சேலம் தெற்கு தொகுதி 58 வது கோட்டம் மகா காளியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பொது கழிவறையில் கழிவுநீரை இரவு நேரங்களில் சாக்கடைகளில் திறந்து விடுவதை தடுக்க மனு எழுதி பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. கடந்த 20 நாட்களுக்கு முன் இந்தப் பகுதியில் நாம் மருத்துவ முகாம் நடத்திய போது பொதுமக்கள் இந்த வேண்டுகோளை நம்மிடம் முன் வைத்தனர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மனு எழுதப்பட்டது. கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்து மனு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னெடுப்பு:
திரு.மோகன்ராஜ் அவர்கள்
பொருளாளர்
கொண்டலாம்பட்டி பகுதி 4
# சேலம் தெற்கு தொகுதி
#சேலம் மாநகர் மாவட்டம்
#நாம் தமிழர் கட்சி