குறிஞ்சிப்பாடி தொகுதி வள்ளலார் புகழ்வணக்கம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு.

26

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி வடலூர் நகரத்தில் திரு அருட்பிரகாச வள்ளலார் பிறந்த  நாளான (05.10.2021) அன்று ஐயாவின் திருஉருவப்பதாகைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொது மக்களுக்கு பலா, நெல்லி,கொய்யா போன்ற மரக்கன்றுகள் வழங்கும்நிகழ்வு நடைபெற்றது.வடலூர் நகரம் முழுவதும் வள்ளலார் அவதரித்த நாளைப்போற்றும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.நிகழ்வானது குறிஞ்சிப்பாடி தொகுதித்தலைவர் இரா.இராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்தி தொடர்பாளர் தி.சம்பத்குமார்,வடலூர் நகரத்துணைத்தலைவர் அருள்சின்னப்பராஜ்,வடலூர்நகர பொறுப்பாளர் சிலம்பரசன், குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றிய செய்திதொடர்பாளர் அருளானந்தம் மற்றும் நாம்தமிழர் கட்சி உறவுகள் ராமு (எ)ராகவன்,பிரசாந்த் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்து தந்தனர்.