ஆத்தூர்(சேலம்) புதியதோர் தேசம் செய்வோம் மாத இதழ் வழங்கும் நிகழ்வு

86

20/10/2021 புதன்கிழமை அன்று, சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகர நாம் தமிழர் கட்சியினர், நாம் தமிழர் கட்சியின் செய்திகளைத் தாங்கி வரும் புதியதோர் தேசம் செய்வோம் என்ற அதிகாரபூர்வமான மாத இதழை ஆத்தூர் நகர பகுதியில் உள்ள சிறு தொழிலகங்கள், தேநீர் கடைகள், தானி நிறுத்தங்கள் மற்றும் சாலையோர வியாபரிகளுக்கு வழங்கினர். இந்த அக்டோபர் மாதத்திற்கான 100 இதழ்களை நமது தொகுதிக்கு நன்கொடையாக வழங்கியவர்கள் நாம் தமிழரின் துளிகள் குழு என்பது குறிப்பிடத்தக்கது. களப்பணியாற்றிய உறவுகளுக்கு நன்றிகளும்!!! புரட்சி வாழ்த்துகளும்!!!

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 9994285522

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி வனக்காவலர் வீரப்பானர்க்கு வீரவணக்கம்
அடுத்த செய்திஜெயங்கொண்டம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு