பவானிசாகர் தொகுதி நகர மற்றும் ஒன்றிய கட்டமைப்பு கலந்தாய்வு

32

பவானிசாகர் தொகுதி22/08/2021) காலை 9:30 மணியளவில் புளியம்பட்டி சுல்தான் சாலையில் உள்ள யாழ் குத்தூசி மையத்தில் நமது கட்சி உறவுகளுக்கு தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும் நகர் ஊராட்சி ஒன்றிய கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த கலந்தாய்வும் நடைபெற்றது.
மேலும் பொறுப்பாளர் தேர்வு குறித்த கலந்தாய்வும் நடைபெற்றது

*இன்றைய கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-*
1).பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்த மாதம் 100 பேர் 100 ரூபாய் திட்டம் தீர்மானமாக இயற்றப்பட்டது.

2).நமக்கு நாமே ஊடகம் என்பதன் அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த செய்தியாக தொகுதி குழுவில் பகிரப்படும் “தினம் ஒரு நற்செய்தி” நாள்தோறும் பகிரப்படும் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது.

3).நமக்கு நாமே பாதுகாப்பு என்பதன் அடிப்படையில் தொகுதிக்கு 35 பேர் செயல்வீரர்கள் பவானிசாகர் தொகுதியில் இணைக்க வேண்டும் அப்படி இணையும் நபர் மாவட்டத்தில் நமது உறவுகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உடனடியாக களத்திற்கு வர வேண்டுமென்ற தீர்மானம் இயற்றப்பட்டது.

4).நமது உறவுகள் அனைவரும் அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் நமது கட்சியின் ஓட்டிகளை ஒட்ட வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

5). நமது கட்சி உறவுகள் வெளியில் செல்லும் போது கட்சியின் அடையாளமாக சீருடை அல்லது கட்சி புலிச்சின்னம் பொறித்த பொத்தானை அணிந்து செல்ல வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.

நா.தமிழ் பிரசாந்த்
இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி
91597 52859