பத்மநாபபுரம் தொகுதி தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு

22

குமரி விடுதலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் விதம் தக்கலை பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள குஞ்சன்நாடார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை 9:30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

இந்த நிகழ்வில் பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சீலன் தலைமை தாங்கினார் குமரி மத்திய மாவட்ட தலைவர் பபின் தாஸ் ரிசோ முன்னிலை வகித்தார், பத்மநாபபுரம் தொகுதி துணை செயலாளர் கிப்சன், இணை செயலாளர் ராஜா, குருதி கொடை பாசறை செயலாளர் சமீம் இணை செயலாளர் ரதீசு ஜோசுவா, திருவட்டார் ஒன்றிய துணை தலைவர் ரூபன், தமிழ் மீட்சி பாசறை செயலர் விஜூ, கல்குறிச்சி பொருளாளர் மிக்கேல், முத்தலகுறிச்சி பொருளாளர் லாசர், பத்மநாபபுரம் நகராட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலர் சாஜி மற்றும் பலர் கலந்துகொண்டு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.