சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

2

சிவகாசி தொகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு ஆகஸ்ட் 28, 2021 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக சிவகாசி சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்வு கீழ்க்காணும் கண்டனங்களை முன் வைத்து நடத்தப்பட்டது.

1. தவறான மின்பயனீட்டு முறையால் ஏற்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரியும்
2. சிவகாசி பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் திருட்டை தடுத்து நிறுத்தக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811