அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

22

அம்பத்தூர் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது.  இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன, குறிப்பாக வருகின்ற 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் 3 கல்வெட்டுகள் திறப்பு மற்றும் புலிக்கொடியேற்ற நிகழ்வுக்கான திட்டமிடல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் வட்ட பொறுப்பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 56 பேர்கள் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்கினார்.