அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினைச் செயற்படுத்தியது போல, பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு பாராட்டும் கோரிக்கையும்!

89

பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை இன்னும் விரிவாக்கம் செய்து, செயலாக்கம் செய்ய வேண்டுமெனும் விருப்பத்தை முன்வைத்து, இத்தகைய சீர்மிகு நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்!

இதேபோல, ஆதித்தமிழ்க்குடிகளுக்கு வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்க வழிவகைகளை செய்ய முன்வர வேண்டுமெனக் கோருகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதொலைநோக்குப்பார்வையில்லாத, தீர்வுகளை முன்வைக்காத, தன்முரண்பாடுகளைக் கொண்ட மேம்போக்கான நிதிநிலை அறிக்கை! – சீமான் மதிப்பீடு