புலம்பெயர் நாடுகளில் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை இடம்பெறச்செய்ய உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளும் அன்பும்!

94

புலம்பெயர் நாடுகளில் ‘அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை’ எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப்புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு யாவும் முற்றிலும் தவறாகக் திரிக்கப்பட்டு, பதிவு செய்துவிடக்கூடாது என்ற நோக்கில் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கருத்துத் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில், அப்பாடப்புத்தகங்களின் திருத்தப்பட்ட பக்கங்களை என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர். உண்மையான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச்செய்ய அவ்வமைப்புச் செயல்பட்டிருப்பது கண்டு மகிழ்வுற்றேன். இதற்காக உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும், உலகத்தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் எனது வாழ்த்துகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி