பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

63

1-8-2021 ஞாயிறு அன்று பெரம்பலூர் மாவட்டம் நேசன் அரங்கத்தில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையிலும் ,பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் இராஜோக்கியம் ஆகியோரின் முன்னேற்பாட்டிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் கடந்த சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தற்போதைய மாவட்ட பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இரு தொகுதியைச் சார்ந்த செயலாளர்கள் தங்கள் தொகுதிகள் குறித்து விவாதித்தனர். மேலும் இரு தொகுதிகளை சார்ந்த பாசறை, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கிளை உறவுகள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்றும் அவசியமான கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் மாவட்ட, தொகுதி மற்றும் பாசறைப் பொறுப்புகளுக்கு தகுதியான உறவுகள் அனைவரின் முன்னிலையிலும் வாசிக்கப்பட்டு தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி தமிழ் தேசியம் சார்ந்த வினா விடை போட்டி
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) எரிபொருள் மற்றும் எரிகாற்று உருளை விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்