பெரம்பலூர் மாவட்டம் புலி கொடியேற்றும் நிகழ்வு

51

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், மருதடி கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் புலி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையில், தொகுதிச் செயலாளர் பாலகுரு அவர்கள் முன்னிலை வகிக்க, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு. இளங்கோவன் அவர்களின் ஆலோசனைப்படி கிளை உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட கிராமமக்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.