பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றியம், அருமடல் கிளையில் 1-8-2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு ப.அருள் அவர்கள் தலைமையில், பெரம்பலூர் தொகுதிச் செயலாளர் பாலகுரு அவர்கள் மற்றும் முன்னிலை வகிக்க, அருமடல் கிளை உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட கிராமமக்கள் அனைவருக்கும் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.