திருச்செந்தூர்-குரும்பூர் அருகே குரங்கன்தட்டு பகுதியில் சட்டத்தை மீறி மரங்கள் வெட்டப்பட்டு கேரளாவிற்கு வேகவேகமாக கடத்தப்படுவதை அறிந்து, நிகழ்விடத்திற்கு தொகுதி தலைவர் ஸ்டீபன் லோபோ தலைமையில் சிறு குழு ஒன்று நிலைமையை அறிந்து வரச் சென்றது.
ஆனால் அங்கு மரங்கள் ஒப்பந்ததாரர்கள் எனச் சொல்லி பலரும் மரங்களை எந்திரங்கள் மூலமாக வெட்டிக் கொண்டிருந்தனர்.
உடனடியாக கட்சியினர் எந்திரங்களை சிறை பிடித்தனர். உடனே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்கள் பொருட்களை அப்படியே போட்டுவிட்டு ஓடி விட்டனர்.
அங்கு சாலை மறியலும் நடைபெற்று நெல்லை திருச்செந்தூர் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. குரங்கன் தட்டிலிருந்து நல்லூர் ரயில் கதவு வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
காவல்துறை வந்து சமாதானம் பேசியும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும், பேருந்து பயணிகளிடம் நிகழ்வை விளக்கியும் கட்சியினர் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர். எனவே கட்சியினர் அனைவரும் கைது செய்யப்பட்டு குரும்பூர் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
மதுரை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி, திருச்செந்தூர்-அம்பை சாலை விரிவாக்க இயக்குநரிடம் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மாற்று மரங்களை ஏன் நடவில்லை என விளக்கம் கேட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகவும், தமிழ் நாட்டு வளங்களை கேரளத்திற்கு கடத்தும் இச்செயலை அரசு கண்டும் காணாமல் இருப்பது தமிழர் துரோகம்.
திருச்செந்தூர் தொகுதி
9042210818