குளச்சல் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்

30

௧. கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிணற்றுவிளை முதல் பரணமுறி வழியாக வலியமார்த்தாண்டன்விளை செல்லும் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மிகவும் பழுதடந்து
குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவாக சரிசெய்வதற்காகவும்,

௨. பரணமுறி கொன்னக்கோடு பகுதியில் அன்று (16-06-2021) கான்கிரீட் சாலை போடப்பட்டு மீதமுள்ள பகுதி கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சாலையையும் உடனே சரி செய்ய கேட்டும்,

௩. அஞ்சாலி மேற்குசரல் சாலை மிகவும் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க கேட்டும் கல்லுக்கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் திரு. ஆன்றோ பெலிக்ஸ் (இணைச் செயலாளர் குளச்சல் தொகுதி), திரு. ரூபன்(பொருளர் குளச்சல் தொகுதி), திரு. ஸ்டிபன் (சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் குமரி மத்திய மாவட்டம்) திரு. அனு பிரசாத்(பொருளர் கல்லுக்கூட்டம் பேரூராட்சி), திரு. சேம் ரூபன் (கையூட்டு ஒழிப்பு பாசறை செயலாளர் குளச்சல் தொகுதி) திரு. ஆக்னல் போஸ்கோ (கல்லுக்கூட்டம் பேருராட்சி) ஆகியோர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி மரம் நாடும் நிகழ்வு
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு