திருச்செந்தூர் தொகுதி
முற்றுகை ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் 09 – 07 – 2021 வெள்ளி
காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை அம்மன் புரத்தில் திருச்செந்தூர் முதல் பாளையங்கோட்டை வரை அமைக்கப்பட இருக்கும் தொழில் வளர்ச்சி சாலை திட்டப் பணிகளுக்காக வெட்டப்படும் நூற்றாண்டு மரங்களுக்கு மாற்று திட்டம் என்ன என்பது குறித்தும், அதுவரையிலும் நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்டாமல் இருக்கக் கோரியும் திரு.ராஜசேகர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலும் நடைபெற்றது.
அதிகாரி பேச வருவார் என அலைகழிக்கப்பட்டு, பின் 25 பேரும் கைது செய்யப்பட்டு குரும்பூர் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாற்று ஏற்பாடு செயல்படுத்தப்படாமல் மேலும் மரம் வெட்டப்படுவது தொடருமானால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்!
தொகுதி சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளோம்!
தொடர்புக்கு
9042210818