ஆலங்குளம் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

51

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், மேகதாது அணையை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்தும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தொகுதி தலைவர் திரு. முத்துராஜ் ஈசாக் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் திரு.நாகலிங்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வினை தொகுதி இணை செயலாளர் திரு. சிவசங்கரன் பாணர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும் கடையம் தெற்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், கடையம் தெற்கு ஒன்றிய துணை தலைவர் திரு. சகாய ஆக்னல் ஆஸ்பன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.பிரவின், தொகுதி மகளிர் பாசறை தலைவர் திருமதி. சங்கீதா மற்றும் தொகுதி உறவுகள் திரளாக கலந்துகொண்டனர்.

விமல் குணசேகரன் – 9551576617